மதிப்பிடுதல் நேரம்.....
வருடத்திற்கு ஒருமுறை வரும் வயிதெரிச்சலும் வசந்தமும் !!!
ஆம்..
வருவது வந்தால் வசந்தம் தான்..
வேறொருவனுக்கு போனால்.. வயிதெரிச்சல் தான் !!!
இது சதவிகிதத்தில் சடுகுடு ஆடும் நேரம்!!!
நகருக்கு வெளியே வாங்கிய புது வீடு..
தவணை முறையில் வாங்கிய T.V.
எதிர்நோக்கி காத்திருந்தது..இந்த ஒரு மாதம்!!!
அவளுடேய சம்பளம் அறுவது சதவிகிதம் வுயர்ந்தால் ..
என்னுடையே மதிப்பு எண்பது சதவிகிதம் சரியுமே?? ..
ஒரு கணவனின் கவலை மாதம் !!!
நேற்று வரை நன்றாக பேசிய நண்பன்..
இன்று முறைத்து பார்த்தான்..கவலை முகத்தோடு..
அவனுக்கு தெரியவில்லை எனக்கு கிடைத்தது எட்டு சதவிதம்தான்!!!
கேட்டால் "confidential” ஆம்!!!
பத்து மாதம் பாடுபட்டு உழைத்தால்..
பங்கு சந்தை சரியில்லை..
பேசாமல் இரு !! இல்லை ..
பார்த்துக்கொள் வேறு வேலை!!. என்றார் முதலாளி..
வீட்டு கணக்கின்..
இடிபாடுகளில் சிக்கியிருக்கும் இவன்
இன்னொரு வேலை தேடுவது எங்கே ???
வேறு வழி இல்லை..வாயை மூடி கொள்.. என்பர் சிலர்..
நாளைக்கே ராஜினாமா செய்வேன்..
நன்றாக பாடம் புகட்டுவேன் ..என்பர் சிலர்..
எதற்காக புல்லாங்குழல் வேய்துக்கொண்டு..
அடுப்பு வூதுகிரை..என்பர் சிலர்..
ஆம்.. என் வீட்டின் அடுப்பு எரிய..நான் ஊதுகுழல் தான்..
புல்லாங்குழல் இல்லை !!!
Wednesday, November 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment