சிங்கார சென்னைக்கு...சிங்கபூரிலிருந்து....
"இங்கிருப்பது என்ன இல்லை??" என்று எண்ணிக்கொண்டு இருக்கும்போது..."எண்ணம்" இல்லை என்பது சற்று தாமதமாகவே புரிந்தது...
அடிக்கு ஒன்று என்று அடுக்கி வெய்த்திருக்கும் "குப்பைதொட்டி",அளவுக்கு மேல் செலவு செய்யும் அரசாங்கம்,அப்படியே...குப்பையை வீசினாலும் அபராதம்...
இங்கே இருக்கும் சுத்தத்திற்கு, இவை அணைத்தும் காரணமில்லை என்பதை புரியவைத்தாள் ஐந்து வயது சிறுமி ஒருத்தி !!!
தாய் வாங்கி தந்த "Lolly pop" ... பேருந்திற்குள் நுழைவதற்குள் முடித்துவிட்டாள் !!!
தாய் தந்த காகிதத்தில் வாயை துடைத்து விட்டு ....அதை தன பாக்கெட் பைக்குள் ..அழகாக மடித்து வைத்துக்கொண்டாள் !!!
அடுத்த ஸ்டாப்பில் இறங்கியதும்அங்குள்ள தொட்டியில் போட்டாள்..
எப்போது வரும் இந்த ஒரு பழக்கம் ???? நம் குழந்தைகளிடம்...
தொட்டில் பழக்கத்திற்கும்...தொடக்கம் வேண்டும் !!!
தொடங்குவது நாமாக இருக்க வேண்டும் !!!
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!!!!
Wednesday, January 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
ஏன் ஜனவரிக்கப்பறம் எழுதவே இல்ல? எழுதுங்க...
ReplyDelete