Tuesday, November 2, 2010

வீடு

வீடு
பூமி பிரபஞ்சத்தில் ஏன் பெயரில் ஒரு புள்ளி !!

Wednesday, January 13, 2010

சிங்கார சென்னைக்கு...சிங்கபூரிலிருந்து....

"இங்கிருப்பது என்ன இல்லை??" என்று எண்ணிக்கொண்டு இருக்கும்போது..."எண்ணம்" இல்லை என்பது சற்று தாமதமாகவே புரிந்தது...

அடிக்கு ஒன்று என்று அடுக்கி வெய்த்திருக்கும் "குப்பைதொட்டி",அளவுக்கு மேல் செலவு செய்யும் அரசாங்கம்,அப்படியே...குப்பையை வீசினாலும் அபராதம்...

இங்கே இருக்கும் சுத்தத்திற்கு, இவை அணைத்தும் காரணமில்லை என்பதை புரியவைத்தாள் ஐந்து வயது சிறுமி ஒருத்தி !!!

தாய் வாங்கி தந்த "Lolly pop" ... பேருந்திற்குள் நுழைவதற்குள் முடித்துவிட்டாள் !!!

தாய் தந்த காகிதத்தில் வாயை துடைத்து விட்டு ....அதை தன பாக்கெட் பைக்குள் ..அழகாக மடித்து வைத்துக்கொண்டாள் !!!

அடுத்த ஸ்டாப்பில் இறங்கியதும்அங்குள்ள தொட்டியில் போட்டாள்..

எப்போது வரும் இந்த ஒரு பழக்கம் ???? நம் குழந்தைகளிடம்...

தொட்டில் பழக்கத்திற்கும்...தொடக்கம் வேண்டும் !!!

தொடங்குவது நாமாக இருக்க வேண்டும் !!!

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!!!!

Thursday, January 7, 2010

2*10+6.....இருபத்தாறாஆஆஆஆஆ ????

விலகி ஓடினாலும் வயது விடுவதில்லை !!!
ஆம் நான் இப்போது இருபத்தாறு !!!
ஊரார் சொல்கிறார்கள் ...இது கல்யாண வயதாம்...
உள்ளதை சொல்கிறேன்..குழப்பம் குறையவில்லை!!!
நேற்று வரை ..
விட்டத்தை பார்த்து வட்ட "புகை" விட்ட நண்பன்..
இன்று..
வாடை பிடிக்கவில்லை... வாழ்க்கையை பார்த்துக்கொள்..
என்று அறிவுரை சொல்கிறான்...
திருமண வாழ்க்கையின் ஒத்திகை காலமாம்..
மாப்பிள்ளை சந்தையில்..மயிறுக்கும் மதிப்பு உண்டாம்...
எட்டிபார்க்கும் ஒன்றிரண்டு வெள்ளை முடியும்...
ஏளனமாய் சிரிக்கிறது..
திருமணம் ஒரு தீர்க்கதரிசனம்...
சொர்கத்தின் கதவு ..என்கிறான் ஒருவன்...
திருமணம் என்பது அறியாமை..
Nighty அணிந்த நரகம்..என்கிறான் ஒருவன்...
எது எப்படியோ..
விட்டு விலகினாலும் வயது விடுவதில்லை...