நீ ஒருவன் தானா ?????????
மன்னனாய் நீ ஆள்வதற்கு ஒரு உலகம் அமைத்தாய்
"மதம்" என்னும் பல மாநிலங்கள் அமைத்தாய் !
"சாதி" என்னும் பல சங்கங்கள் அமைத்தாய் !
"எதிர் கட்சி " வேண்டுமே???
"நாத்திகம் " என்னும் உன்னை நாடாதவர்களை வைத்தாய் !
கட்சி என்றாலே ஊழல் வேண்டுமே??
உன் பேரை சொல்லி ஏமாற்ற.. பல உட்கட்சி பூசல்கள் வைத்தாய் !
மரணம் ஜனனம் என்னும் மாற்ற முடியாத நீதி துறை வைத்தாய் !
உன் சட்டத்தின் ஓட்டையை உடைக்க முடியவில்லை..புலம்புகிறார்கள் மருத்துவர்கள்… !!!
ஏழை.. பணக்காரன்.. என்னும் மாற்ற முடிந்த "நிதி" துறை வைத்தாய் !
ஒரு பக்கம் ஒரே பிரசவத்தில் ஒன்பது உயிரை முளைக்கிறாய் !
மறு பக்கம், அநியாய நோய்களை விட்டு அறுவடை செய்கிறாய் !
விந்தையாகவே உள்ளது உன் "விவசாய துறை" !
இன்பம் துன்பம் என்னும் "கல்வி துறை" வைத்தாய் !
காதல் காமம் என்னும் கலவி பாடமும் அடங்கும் அதில் !!
ஆணும் பெண்ணும் இணைய வைத்தாய் ! ..அதிலே ஒரு இன்பம் வைத்தாய் !கூடி வேலை பார்த்ததற்கு குழந்தை என்னும் கூலி தந்தாய் !
மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறான கொள்கை இருந்தாலும்
மந்தம் இல்லாமல் பொய் கொண்டு இருக்கிறது உன் "மனிதவள மேம்பாட்டு" துறை !!!
ஞாயிற்று கிழமைகளில் பாதிரியார் பாடுகிறார்..
வெள்ளி கிழமைகளில் மௌலானா ஓதுகிறார்..
அணைத்து கிழமைகளிலும் அர்ச்சகர் அலறுகிறார்..
திடமாய் தான் இயங்குகிறது உன் "தகவல் தொழில்நுட்ப துறை" !!!
நிலவுக்கும் ,நேப்டுயுனுக்கும் நெடுஞ்சாலை அமைக்கிறார்களே ??
"வெளியுறவு" துறைக்கு விதை போடுகிறாயோ???
நிலநடுக்கத்தில் நிலம் பிளந்தது..
சுனாமியால் கடல் வளர்ந்தது..
சூறாவளியால் காற்றும் காவு வாங்குகிறது..
உன் முப்படையும் அணுகுண்டு சோதனை நடத்துகிறதோ ??
இங்கே வறட்சி வாட்டுகிறது.. அவசர கால உதவி செய்..!!
மக்கள் குறை கேட்பதற்கு ..மத குருமார்களோ???
மக்கள் மனு ஏந்தி வருகிறார்கள் உன் இருப்பிடம் தேடி…
சர்வாதிகாரியாக நீ சாதனைப்படைத்துக்கொண்டு தான் இருக்கிறாய்!!
இங்கே..
மக்களாட்சிக்கு உன் மாநிலங்கள் தான் எங்கள் "மாடல்" கள் !!!
"Minority" , "Majority" என்று மிஞ்சி விடுகிறார்கள்!!!
Thursday, October 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment