Tuesday, October 27, 2009

ஊரு விட்டு ஊரு வந்து.......

பால் வெண்மையில் படுக்கை உண்டு..
படுத்தாத்தான் தூக்கம் வரலே…
பிசாவும் பாஸ்தா வும் உண்டு..
பசி போக்க தான் வழி இல்லே..
கொட்டி இறைக்க பணம் வுண்டு..
கூடி சிரிக்கே நண்பன் இல்லே..
வானலாவே கட்டிடம் உண்டு..
வாழ்கை தான் பிடிப்பு இல்லே..
அரைகுறை ஆடை பெண்கள் ஆயிரம் உண்டு..
அன்பாய் பேச ஒருத்தி இல்லே..
வாழ்கையில் அனுபவிக்கே ஆயிரம் உண்டு.
வாய் விட்டு சிரிக்கத்தான் வழியும் இல்லே..
திரும்பியே பக்கம் எல்லாம் சொர்க்கம் உண்டு..
தாய் தமிழில் பேச ஆள் இல்லே..

டென்னிசும் பில்லியார்ட்சும் ஆடி பழக ஆசை இல்லே..
தெருவுலே பெட் மேட்ச் போட ஆசை தான் !!
ten டாலர் சிகரெட்டே பிடிக்கே ஆசை இல்லே..
டி கடையில் கிங்க்ஸ் அடிக்கே ஆசை தான்
சொகுசு பஸ் லே உட்கார்ந்து வர ஆசை இல்லே..
சுதந்திரமா footboard அடிக்கே ஆசை தான்.

இங்கே..
கல் வூடைத்து கரி சுமக்கவில்லை நான்..
கம்ப்யூட்டர் லே கலக்கி கொண்டு தான் இருக்கேன்….
இருந்தாலும்..
ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து அழைப்பு வரும்போது..
யோசித்து எடுக்கிறேனே அது எதற்கு ??
பலமுறை வீட்டிற்கு பேசினாலும்…
பாசம் குறைவது போல் தோன்றுகிறதே அது எதற்கு??
இயற்கையாய் இருக்க முடியாமல் எந்திரமாய் வாழ்கிறேனே அது எதற்கு??
மொழி மாறிய ஊருக்குள் விழி பிதுங்கி திரிகிரேனே அது எதற்கு??
பத்து நிமிடம் தனியாய் யோசித்தால்..பயம் ஒன்று வருகிறேதே அது எதற்கு??

Thursday, October 15, 2009

Kadavullukku...

நீ ஒருவன் தானா ?????????
மன்னனாய் நீ ஆள்வதற்கு ஒரு உலகம் அமைத்தாய்
"மதம்" என்னும் பல மாநிலங்கள் அமைத்தாய் !
"சாதி" என்னும் பல சங்கங்கள் அமைத்தாய் !
"எதிர் கட்சி " வேண்டுமே???
"நாத்திகம் " என்னும் உன்னை நாடாதவர்களை வைத்தாய் !
கட்சி என்றாலே ஊழல் வேண்டுமே??
உன் பேரை சொல்லி ஏமாற்ற.. பல உட்கட்சி பூசல்கள் வைத்தாய் !
மரணம் ஜனனம் என்னும் மாற்ற முடியாத நீதி துறை வைத்தாய் !
உன் சட்டத்தின் ஓட்டையை உடைக்க முடியவில்லை..புலம்புகிறார்கள் மருத்துவர்கள்… !!!
ஏழை.. பணக்காரன்.. என்னும் மாற்ற முடிந்த "நிதி" துறை வைத்தாய் !
ஒரு பக்கம் ஒரே பிரசவத்தில் ஒன்பது உயிரை முளைக்கிறாய் !
மறு பக்கம், அநியாய நோய்களை விட்டு அறுவடை செய்கிறாய் !
விந்தையாகவே உள்ளது உன் "விவசாய துறை" !
இன்பம் துன்பம் என்னும் "கல்வி துறை" வைத்தாய் !
காதல் காமம் என்னும் கலவி பாடமும் அடங்கும் அதில் !!
ஆணும் பெண்ணும் இணைய வைத்தாய் ! ..அதிலே ஒரு இன்பம் வைத்தாய் !கூடி வேலை பார்த்ததற்கு குழந்தை என்னும் கூலி தந்தாய் !
மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறான கொள்கை இருந்தாலும்
மந்தம் இல்லாமல் பொய் கொண்டு இருக்கிறது உன் "மனிதவள மேம்பாட்டு" துறை !!!
ஞாயிற்று கிழமைகளில் பாதிரியார் பாடுகிறார்..
வெள்ளி கிழமைகளில் மௌலானா ஓதுகிறார்..
அணைத்து கிழமைகளிலும் அர்ச்சகர் அலறுகிறார்..
திடமாய் தான் இயங்குகிறது உன் "தகவல் தொழில்நுட்ப துறை" !!!
நிலவுக்கும் ,நேப்டுயுனுக்கும் நெடுஞ்சாலை அமைக்கிறார்களே ??
"வெளியுறவு" துறைக்கு விதை போடுகிறாயோ???
நிலநடுக்கத்தில் நிலம் பிளந்தது..
சுனாமியால் கடல் வளர்ந்தது..
சூறாவளியால் காற்றும் காவு வாங்குகிறது..
உன் முப்படையும் அணுகுண்டு சோதனை நடத்துகிறதோ ??
இங்கே வறட்சி வாட்டுகிறது.. அவசர கால உதவி செய்..!!
மக்கள் குறை கேட்பதற்கு ..மத குருமார்களோ???
மக்கள் மனு ஏந்தி வருகிறார்கள் உன் இருப்பிடம் தேடி…
சர்வாதிகாரியாக நீ சாதனைப்படைத்துக்கொண்டு தான் இருக்கிறாய்!!
இங்கே..
மக்களாட்சிக்கு உன் மாநிலங்கள் தான் எங்கள் "மாடல்" கள் !!!
"Minority" , "Majority" என்று மிஞ்சி விடுகிறார்கள்!!!

Mugavurai....

Nanbanin nacharippal inthe inaya thanathil idam vaangi vitten.....

Ini... ithanai payanpaduthi...pala imsaigal thodarum..!!!